இம்மட்டும் ஜீவன்|| New Tamil Thanks Giving Song||Vedanayagam Sastriyar ||Sastriyar Mrs. Sarah Martin |
![]() |
Song : Immattum Jeevan
Lyric : Vedanayagam Sastriyar Sung and Performed : Sastriyar Mrs.Sarah Martin Music : Clamant V. Sastriyar Camera and Editing : MGS. Rajan, Mastering Services Digital on : D.K.Enterprises Produced and Copyrights : Dr.P.Martin Devaprasath இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் தோத்தரிப்போமாக அனுபல்லவி நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும். --- இம்மட்டும் சரணங்கள் 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது; கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன். ---- இம்மட்டும் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ; பரம பாதையைத் தொடர்ந்தோம் ; வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம் , வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ; கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்; காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம் சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் --- இம்மட்டும் 3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு தந்து , நொறுங்கினதைக் கட்டிக் கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக் கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர் மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் --- இம்மட்டும் |